Published Date: September 11, 2025
CATEGORY: CONSTITUENCY

தமிழ் மின் நூலகத்தில் மகாகவி பாரதியாரின் கையெழுத்து பிரதிகள் பதிவேற்றம் என்று தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் அவர்கள் வழிகாட்டுதலின்படி மகாகவி பாரதியாரின் கையெழுத்து பிரதிகள் மின் பதிவாக்கம் செய்யப்பட்டு அவரது நினைவு நாளை ஒட்டி தமிழகம் மின் நூலகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன (http://tamildigitallibrary.in) என்று தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 'குயில்', 'சக்திப்பாடல்கள்', 'சந்திரிகையின்கதை', 'விடுதலை' உள்ளிட்ட பாரதியாரின் முக்கிய படிப்புகளின் கையெழுத்து பிரதிகள், 13 தொகுதிகளில் 462 பக்கங்களாக இதில் இடம் பெற்றுள்ளன.
முத்தமிழறிஞர் கலைஞர் 17.02.2001 அன்று தமிழ் இணையக் கல்விக் கழகத்தைத் தொடங்கி வைத்தார்.அதன் ஒரு பகுதியாக செயல்படும் தமிழ் மின் நூலகம் 2017 அக்டோபர் 11 அன்று பயன்பாட்டிற்கு வந்தது. கலை, இலக்கியம், சமயம், வரலாறு, மருத்துவம், அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த அரிய நூல்களும், பருவ இதழ்களும், ஓலைச்சுவடிகளும் தமிழ் மின் உலகத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன.
இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நூல்கள், பருவ வெளியீடுகள், 8 இலட்சத்திற்கும் மேற்பட்ட ஓலைச்சுவடி பக்கங்கள் மின் பதிப்பாக்கம் செய்யப்பெற்றுள்ளன. இம்மின் நூலகம் 17 கோடிக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது.
சங்ககால முதல் சமகாலம் வரையிலான நூல்கள், ஆவணங்கள், ஓலைச்சுவடிகள் ஆகியவற்றைக் கொண்டிருந்த தமிழ் மின் நூலகம் அண்மையில் தகவல் தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தப்பட்டுள்ளது. உள்ளடக்கங்களில் ஒளிப்படங்கள், ஒலி தொகுப்புகள், காணொளிகள், நில வரைபடங்கள், தொல்லியல் தொடர்பான தகவல்கள் ஆகியவையும் புதிதாக பதிவேற்றம் செய்யப்பட்டு ஒரு பல்லூடக பயன்பாட்டு பெட்டகமாக மின் நூலகம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் ,பிராமி ,வட்டெழுத்து, கிரந்தம் மற்றும் பிற மொழிகளில் உள்ள கல்வெட்டுகள் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
மாணவர்களும், ஆய்வாளர்களும், தமிழ் ஆர்வலர்களும் எளிதாகவும் விரைவாகவும் பயன்படுத்தும் வகையில் பயனர் விருப்பத்தின் அடிப்படையில் தேடல் வசதி மற்றும் வகைப்படுத்துதல் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மின்னுலகத்தில் உள்ள ஊடகங்கள் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. அரியலூர் ஆவணங்கள் தொடர்ந்து சேகரிக்கப்பட்டு எழுத்தாளர் விவரம் உள்ளிட்ட 0குறிப்புக்கலுடன் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
Media: Murasoli